வாழ்வதற்கு பயமெதற்கு

நண்பன் ஒருவன் கேட்டதற்காய் இப்போது எழுதுகிறேன்...

வாழ்வதற்கு பயமெதற்கு?
வீழ்ச்சியிலும் பயனிருக்கு!
அடுத்தடுத்த வெற்றிகளும்
அழித்துவிடும் நிலையிருக்கு!

கனவினிலும் கலங்காதே!
கண்ணீரைச் சிந்தாதே!
மனதினிலே உரமிருந்தால்
மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை!

பரந்திருக்கும் பூமியைப்பார்
படர்ந்திருக்கும் அழகுகள்பார்
தினந்தினமும் திறந்திருக்கும்
திக்குகளின் வழிகளைப்பார்

பயணிக்கத் துவங்கிவிடு
பணிந்தநிலை மறந்துவிடு
பயனுள்ள நட்புகளில்
பண்போடு கலந்துவிடு

வெற்றிஒரு கனிஎன்ற
வெற்றெண்ணம் அகற்றிவிடு
வேரின்றி மரமில்லை
வேராகத் துணிந்துவிடு!..

தோல்விகளில் துவளாதே
தோழமைகள் பலவுண்டு
கேள்விகளை முதலில்கேள்
உனக்குள்ளே பதிலுண்டு

அ.மு.நௌபல்
சிரம்பான். 9/11/2016

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (6-Feb-17, 7:55 am)
பார்வை : 126

மேலே