😂😂😂

கவிதை எழுதத்
தலைப்பு தேடி
தவமிருக்கின்றது
என் தமிழ்!

வாழ்த்தி மட்டுமே
பழக்கப்பட்ட நான்
வசைபாடிவிடக் கூடாதென
மௌனம் காக்கிறது
என் எழுத்து!..

உள்ளே எழும்
கவி அலைகள்
வெளியே விழாமல்
வேலி போட்டிருக்கிறது
என் திமிர்!..

பாடுபொருள் பஞ்சமில்லை!
பட்டதோ கொஞ்சமில்லை!
படைத்துக் களைத்துப்
படுத்துக் கிடக்கிறது
என் பேனா!...

ஒன்று மட்டும் உறுதி!
நெருப்பில் வாட்டி வாட்டி
உருக்கப் பட்டதால்
உருமாறிப் போயிருக்கிறது
இந்தத் தங்கம்!...

அ.மு.நௌபல்
15/12/16

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (6-Feb-17, 7:51 am)
பார்வை : 93

மேலே