தியாகம்

தியாகமெனும் தலைப்பினிலே
திண்ணமாக எழுதிடவே
காயத்திற்கு மருந்துபோடும்
காக்கின்ற மருத்துவர்போல்
தீயாகி திக்கெல்லாம்
தீர்க்கமான வெளிச்சத்தைத்
தாய்போலே தந்துவிட்டு
தன்னிலையும் பாராமல்
வாய்திறந்து பேசாது
வடிக்கின்றாய் கண்ணீரை .
மாயமான உலகத்திலே
மகத்தான சக்தியும்நீ !!!!
---- மெழுகுவர்த்தி !!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-17, 9:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 71

மேலே