கரகாட்டக் கலை - மரபு கவிதை
கரகங்கள் தலைமேலே
------ கண்கவரும் காரிகைகள்
விரல்தனையும் அசைத்தாடி
------ விந்தைபல செய்கின்றார் .
சிரமான கலையிதுவாம்
------- சிங்காரிகள் ஆட்டமன்றோ !
தரமான தமிழகத்தின்
------- தலைசிறந்த நாட்டுகலை !
ஆடுகின்றார் பெண்களுமே
------ அனைவருமே ரசித்திடவே !
பாடுகின்றார் நையாண்டியும்
------ பாரதத்தின் பழங்கலையாம்
தேடுகின்றார் இற்றைநாளில்
------- தெய்வீகம் அழிந்திடுதே !
ஓடுகின்றார் மேற்றிசைக்கு
------- ஒர்ந்திடுமா நம்கலையே !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்