அந்த ஒரு நொடி பிப்ரவரி 14

அந்த ஒரு நொடி. . . . .

பிப்ரவரி 14. ......

அவள் முகம் காண
அவள் வீடு நோக்கி
தலை கீழாய் தலை வைத்தான் கதிரவன். . . .
மாலை பொழுதென்று
அவள் வருவாளா ??
ஒரு வேளை கண்ணிமைத்தால் களவாடி கொள்ளலாமே யென்ற
ஆசை சுமந்து .. . .
கதிரவனும் காலம் விற்று காத்திருக்க . . .

எதை வாங்க நான் சென்றேனோ . .
அதை நான் மறந்து ...
அவனோடு
கை கோர்த்து நானும் காத்திருந்தேன்
அந்த புளியங்காய் பூத்து குலுங்கும் பேருந்து நிறுத்தத்தில் . . .
பக்கத்து இருக்கை
பயணி போல். . . .

கதிரவன் கள்வன் மட்டுமா
வஞ்சகனும் கூட. . .
எனக்கு அப்போதுக்கூட
ஐயம் ஏற்படவில்லை
அன்றைய நாளின்
மிக வேக
மாலைப்பொழுதை
பார்த்தும் கூட . . .

அவள் வீட்டு
மேசை ரோசா செடியில்
மொட்டு மலரும்
காட்சி கண்டேன் . . .
சிறு பிள்ளைப்போல்
அதனுடன் பேசிச்சிரிக்கும்
சத்தம் கேட்டேன். . .
சித்திர தேவதைகளை
இதுவரை
வெண்ணிறமாக கண்ட நான் . .
முதன் முதலில்
என் கருப்பு நிறத்தை கண்ணியமாக சிறது சிறிதாய் கரைத்து
அந்த வெண்ணிறத்தில்
கலந்து தீட்டிய சித்திரை தேவதையை கண்டேன்.. .

அந்த ஒரு நொடியில்
ஆழ்ந்துதான் போனேன். . .
சுவாசித்து மட்டுமே பழக்கப்பட்ட
ஆருயிர் பெட்டி . . .
தடைப்பட்டு
இன்பச்சொருகலால் பூத்து குலுங்கியது
அவள் வீட்டு
மேசை ரோசாப்பூக்கள் போல் . . .
வருடித்தான் பார்ப்பாளோ??
வதைக்க இடமில்லை...

யார் அவளோ??
என்னுடன் கதிரவனும் கேட்க. . .
இப்போது நான்
கள்வனுக்கெல்லாம் கள்வனானேன். .
வஞ்சகனுக்கும் வஞ்சகனானேன். . . .

சற்று முந்திக்கொண்டு
என் பார்வை முத்திரையே
அவள் முகத்தில் முத்தமிட்டு
முறையாக்கி கொண்டேன். . .
என் மூச்சுக்காற்றை
அவள் கூந்தலுக்கு தூதனுப்பி
என் காதல் ரகசியத்தை கருப்பு நிறத்தில்
கலந்து விட்டேன். . . .

ஒன்று தெரியுமோ
மாலை நேர கதிரவனை காணும் போதெல்லாம்
எனக்குள் ஒரு புன்னகை. . .
அன்றும் அதே சூழல்
அவள் கேட்கிறாள்
தேநீர் அருந்தும்போது
என் மனைவியாக. . .
ஏன் தானாக சிரிக்கிறீர்கள். . .

நான் கூறினேன்
இன்று பிப்ரவரி 14
நான் உன்னிடம்
என் காதலை வெளிப்படுத்திய
நாளென்று. . . . .
என்னுடன் அவளும் வெட்கப்புன்னகை
மறுபாதி தெரியாமல். . . .

காதல் வரிகளில் :மருதுபாண்டியன்.க

எழுதியவர் : மருதுபாண்டியன். க (6-Feb-17, 10:00 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 266

மேலே