என் வெண்ணிலா

என் வெண்ணிலா..
********

மெல்லத்திறந்து
மூக்கை நுழைகிறாள்
முக்காடிட்டு என் வெண்ணிலா...

காற்றை இழுத்துப்பிடிக்கிறாள்
நான் மூச்சுத்திணறி
அவளுள்ளே இறக்க வேண்டும்...

பார்வை அம்புகளால்
இருளை கிழிக்கிறாள்
நிழலாய் அவள் ஒட்டிக்கொள்ள...

தேகம் முழுவதும் நிரம்பி வழிகிறாள்
அருவியை விட வேகமாய்....

சுவாசம் சூடேற்றி
நான்கு வரிக்கவிதை செய்கிறாள்,
வியர்த்த இதழ்களைக்கொண்டு....

மென்மையாக அருந்துகிறாள்
அவளிமைகளாலே - எனை,
துண்டு துண்டாக்கி......

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (7-Feb-17, 4:27 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : en vennila
பார்வை : 110

புதிய படைப்புகள்

மேலே