குளம் கூடிய விரைவில் குப்பை கூளம்
குளம், கூடிய விரைவில் குவிந்துவிடும் - குப்பை கூளம்...
வருடம் முழுவதும் வற்றாத குளம், எமது - ஊர் குளம்
இருபோகம் விளைச்சல் தரும் குளம்
குளமீன் பிடித்து கூத்தடிக்கும் - சிறுவர் குழாம்
தற்போது குப்பைகள் கொட்டப்படும் குளம்
கொள்ளை நோய்கள் பெருகும் அவலம்
அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பு
பொதுநலத்தில் பொறுப்பில்லா பொதுமக்கள்
தட்டிக்கேட்காத தன்னலமிக்க மனிதர்கள்
ஊராட்சியின் உதாசீனம்
உழவர் வர்க்கம் உழலும் நிலை...
தனிமனித ஒழுக்கம் - தலை நிமிர்த்தும் தரணியை
தாரக மந்திரமாய் ஏற்று, தலைக்கனம் தவிர்த்து
தன்னிகரில்லா விவசாய விளைச்சல் பெற
வித்திடுவோம்...! விளை(குள+)நீர் காப்போம்...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்