நண்பனின் திருமணம்

நண்பனே,
நாம் சேர்ந்து பல இடங்களுக்கு பயணித்தோம்.
கடற்கரையில் உள்ள மணல் துகள்களுக்கு தெரியும்,
நம் நட்பின் மகிமையை.
இன்று நீ திருமணம் என்னும் புதிய பயணத்தை மேற்கொள்கிறாய்.
இது வழிப்பயணம் அல்ல வாழ்க்கைப் பயணம்!
நீங்கள் இருவர் மட்டும் பயணிக்கும் ஒரு பூப்பயணம்!
இப்பயணத்தில் வரும் மேடுகளையும், பள்ளங்களையும் நீ சமாளித்து,
வாழ்க்கையில் உன் துணையுடன் நெடுநாள் மகிழ்ச்சியுடன் பயணிக்க வாழ்த்தும் உன் அன்புத் தோழன்!
இனிய திருமண வாழ்த்துக்கள் குமரன்.
என்றென்றும் நட்புடன்,
அ. இஸ்மாயில்.