சகலமும் அவனே

கற்பனையோ?,
வாழும் வாழ்க்கையொரு கற்பனையோ??...
கற்பனையென்றால் வரும் இன்பமும் துன்பமும் கானல் நீரோ???...

பதில் தேடும் நேஞ்சே!
நீயே பதிலாய் நிற்கிறாயே....
கற்பனையென்றால் நினைத்த நொடிதனிலே யாவும் மாற வேண்டுமே...
அவ்வாறு மாறாததாலே எதுவும் கற்பனையில்லையே...

யாவற்றையும் ஆட்டுவிக்கும் அருட்பெருஞ்சோதியாய் ஒருவன் சகலத்திற்கும் சாட்சியாய் வீற்றிருக்கிறானே....

மனதால் கள்ளமும், கபடமும், சூதும், பித்தாலாட்டமும் கொண்டிருப்பவரையும் அவனே அறிவானே....

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமென்றடியேன் உணர அருள்புரிந்தவனும் அவனே....

சிவனென்பவருக்கு சிவனாகவும், இயேசுவென்பவருக்கு இயேசுவாகவும்,
அல்லாவென்பவருக்கு அல்லாவாகவும்,
புத்தரென்பவருக்கு புத்தராகவும்,
இயற்கையென்பவருக்கு இயற்கையாகவும்,
அவரவர் எண்ணம் போல் காட்சியாகி,
சாட்சியாகி, அகிலமெங்கும் அரசாட்சி செய்வதும் அவனே....

அவனது அம்சமாய் நாம்...
அவனது அருளாய் நாம்....
அவனுள் வாழ்கிறோம்,
அவனையே எண்ணி....

பயத்தால் அவனை அழைக்கவில்லை....
நம்மை படைத்துக் காப்பதாலே அழைக்கிறேன்....
அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்று உணர்வோமாயின் நாம் நிச்சயம் நல்வழியில் பயணப்பட்டிருப்போமே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Feb-17, 9:15 pm)
Tanglish : sakalamum avne
பார்வை : 423

மேலே