கவிஓவியா மாத இதழ் ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி தந்த தலைப்பு மெரினா புரட்சி கவிஞர் இரா இரவி

கவிஓவியா மாத இதழ் ஆசிரியர்
மயிலாடுதுறை இளைய பாரதி தந்த தலைப்பு !

மெரினா புரட்சி ! கவிஞர் இரா இரவி !

கொட்டக் கொட்டக் குனிந்த தமிழினம்
கொட்டும் கரம் முறிக்கக் கூடியது !

ஏறுதழுவுதல் பண்பாட்டிற்குத் தடை இட்டது
இளைஞர்கள் மாணவர்கள் திரண்டனர் மெரினாவில் !

இப்படி ஒரு பிரமாண்டக் கூட்டம் மெரினாவில்
எப்படிக் கூடியது என்று மிரண்டது நாடு !

வரலாற்றில் பொன் எழுத்துக்களால்
வடிக்க வேண்டிய உன்னதப் போராட்டம் !

அமைதியாக நடந்தது அறவழிப் போராட்டம்
அனைவரும் திரண்டனர் மெரினாவை நோக்கி !

மிரண்டது டெல்லி பிறந்தது சட்ட வழி
மன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினர் !

குடியரசுத் தலைவரும் ஒப்பமிட்டு அனுமதி
குடி கெடுத்த பீட்டா எடுத்து ஓட்டம் !

உலகத் தமிழர்கள் ஒன்றாவதுக் கண்டு
உலகத் தமிழினப் பகைவர்கள் அஞ்சி நடுங்கினர் !

வெண்ணை திரண்டு வருகையில் சட்டி உடைந்த கதையாக
வேண்டாத வேலை செய்து காவல்துறை களங்கப்பட்டது !

தலைவன் இல்லாத போராட்டம் வென்றது
தரணிக்கு ஒற்றுமையின் நன்மையை உணர்த்தியது !

மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் உண்மை
மண்ணில் வெற்றியை நிலையாக நிலை நாட்டினான் !

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை மெரினா
உலகத்தின் கவனம் ஈர்த்து வென்றது மெரினா புரட்சி !

எழுதியவர் : கவிஞர் இரா இரவி (8-Feb-17, 7:48 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 87

மேலே