கண்ணீர்த்துளி பரிசளித்த வரிகள்
கண்ணீர்த்துளி பரிசளித்த
வரிகள் .....
தினமும் தவிக்கிறேன்...
என்னவளை எப்போது காண்பேன் என...
வாழ்வில் வசந்தத்தை காண...அதுவும்...
அவளின் முகம் பார்த்துக்கொண்டே...
கிடைக்குமா அந்த வரம்
என்ன செய்வேன்.....
நான் கேட்பது
உனக்கு பிடிக்கவில்லை
ஆனால்
எனக்கு பிடித்ததெல்லாம் நீதானே
என்ன செய்வேன்.....
ஏனோ என்னில்
வெறுப்பு உனக்கு
அது புரிந்தும்
நான் புரியாமல்
நடிப்பு
என்ன செய்வேன்.....
என்றோ ஒரு நாள்
உன்னை கரம் பிடிப்பேன்
என்று கனவிலும்
பரவசம்
என்ன செய்வேன்.....
காலமெல்லாம்
காத்திருக்கும் எனக்கு
கனபொழுதில்
உன் சில வார்த்தைகள்
சிதறடிக்குறது
என்ன செய்வேன்.....
பிடித்த எனக்கு
பிடிக்க வைக்க
தெரியவில்லையே ..
என்ன செய்வேன்.....
நீயாக என்னை புரிந்துகொண்டு
வருவாயா என்னிடம்...
சத்ஹான் .....