எனக்குள் நீ-3
உன் முகம் பார்த்தேன்
முதல் சந்திப்பில்
மனம் பெரும் பாதிப்பில்
நான் தவிக்க
உன் பதிப்பை என் நெஞ்சில்
வீசினாய் அம்பாக...
அதில் அன்பாக நான்
மாட்டிகொள்ள
விளையாட்டாக நீ சென்றாய்
வினாவோடு விடை தேடும்
நெஞ்சோடு நான் தவித்தேன்..
அழகாக உன்காதலை அனுமதியில்லாமல் ஆணி
அடித்தாய் என் மனதில்
உனை கேட்காமல் இதயம்
இடம்மாறியது இருந்த
இடம் தேடியது உன்னில்...
ஒவ்வொரு சந்திப்பும்
தித்திக்கும்
நிலவாய் உன்வரவு
உன்பார்வை பௌர்னமியானது
நான் பார்த்ததும்
உன் இமைகள் பௌதீகம் பேசியது..
காதலித்தேன் உன் அனுமதி
இல்லாமல்
என்மனதை பறிகொடுத்தேன்
நீ கேட்காமல்...
வாழ வேண்டும் உன்னோடு
வாழ்நாள் என்றும் உன் நெஞ்சோடு
இல்லையென்றால் நான் வெறும்கூடு..
கூடுகட்டி வாழ காத்திருப்பேன்
நாள்காட்டியில் நீ வர தவம்இருப்பேன்
நாள்தோறும் உன்நினைவில்
நலிவடைவேன்....
நீ வந்தால் நான் உயிர்
பிழைப்பேன்
இல்லை உன் நினைவில்
உடல் விடுவேன்
வந்துவிடு என்நெஞ்சோடு...