குழம்பாதே, என்றும் குழப்பாதே,

குழம்பாதே...
என்றும் குழப்பாதே...

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே பெருமையே...

பச்சோந்தியைப் போல் நிறத்தை மாற்றி ஏமாற்றாதே...
ஒருவனுக்கு ஒருத்தியென்னும் மாண்பினை என்றும் மறவாதே...
மனதாலும் தவறு செய்ய எண்ணாதே....

துன்புறுத்தாதே....
மனதாலும் யாரையும் துன்புறுத்தாதே....
ஆடம்பரம் வேண்டாதே....
மனநிறைவு கொண்டு வாழ்வதே ஆனந்த வாழ்வு....

துன்பங்களும், இன்பங்களும் பிறரால் உனக்கு வழங்கப்படுவதில்லையே...
நீயே உருவாக்கிக் கொள்கிறாயே....

மனவியல் வளர்ச்சி காணாததாலேயே உனக்கு யாவும் பிரச்சனைகளாய் காட்சியளிக்கின்றனவே....

தியானம் செய்ய பழகுவதே உனது பிரச்சனைகளுக்கான முதல் தீர்வு....
உனக்கே உன் மீது நம்பிக்கையில்லாமலேயே உனது திறமைகளை உணராமல் உனது வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறாயே....

அறிவில் சிறந்த மனிதர்களென்பது மனித இனத்தின் ஒற்றுமையில் வெளிப்படுமே....
மாறாக, ஒருவரை ஒருவர் அழிக்கவே எண்ணங் கொண்டு செயல்படுவோமாயின்,
என்றுமே நாம் அறிவில் சிறந்தவர்களாக இருக்கப் போவதில்லையே....

வார்த்தைகளும், செயல்பாடும் ஒரே வழியில் இருக்க வேண்டுமே....
இல்லாவிடில், நாம் பகுத்தறிவுள்ள மனிதர்களென்று கூறுவதே மிகப் பெரிய பொய்யாகுமே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Feb-17, 11:58 pm)
பார்வை : 1034

மேலே