வண்டாடும் விழிகள்
வண்டாடும் விழிகள் கொண்ட
தித்திக்கும் தெள்ளமுதே
திண்டாடும் என்விழிகள் கண்டுமனம் ஏங்குதடி
தேன்கனியோ நெஞ்சினிலே பசியாற தூண்டுதடி
விழியழகின் மொழிகண்டு கவிவடிக்க வேண்டுமடி
கோலவிழி குடிகொண்டு கொஞ்சிவர வேண்டுமடி
காலழகின் எழிற்கண்டு தூக்கத்தை வெறுக்குதடி
பைந்தமிழில் சொல்லெடுத்து
வண்ணம் காட்டும் விழிகள் கொண்டு வானவில் கனவு கண்டேன்
எண்ணம் போல விண்ணில் சென்று ஏக்கம் தீர ஆசைகொண்டேன்
சிரித்துவிட்ட இதழினிலே பறிச்சுவைச்ச மதுமலரே
கொத்துமலர் பூங்கொடியே
கொஞ்சும்கிளி சிங்காரமே
முத்தமொன்று என்னில் தந்தால் நித்தமென்றும் மஞ்சமடி
பொன்மேவும் மேனியிலே பூத்தாடும் பொன்மலரே
என்மேவும் ஆசைதனை இசையாக நீ தரவே
பெண்மையதை கண்போல காத்திடவே
விண்போற்றும் மாமனடி