சிறைப்பறவைகள்

வெள்ளை இரவுகளை
நீ கண்கள்மூடி அருந்தியதில்
என் வானம்  அடர்கறுப்பென
தன்னை பிரகடனப்படுத்தியது

பெருத்த வானத்தை ஒற்றைச்சிறகில் இருவரும் அளந்தோம் உலகம்
உனக்கும் எனக்கும் காதெலனஉளறியது

அடிக்கடி சண்டை கொண்டோம்
உன் மௌனத்தை
காதல்தோல்வி சின்னமென
சிலர் காட்சி செய்தனர்

உனக்கும் எனக்குமிடையிம் சண்டை சலித்திருந்ததில்புன்னகைசெய்தோம்
'படுக்கை பகிர
ஆள்வேண்டுமே அவளுக்கு' நாக்குகளின் முட்களால் கிழித்தார்கள்

உன்திசைகளை அவனும்
என் பார்வைகளை அவளும்
தீர்மானித்திருந்தபோதும்
சந்தேகங்களிம் சாவுண்டோம்

நீண்ட இடைவெளியில் நம்
குடும்பங்களின் சந்திப்பில்
இருவர் குழந்தைகளும்
புதிய வானத்தை
வரையத்தொடங்கின

'பிஞ்சில பழுத்ததுகள்'
நாக்குகளின் முட்கள் இடம்மாறியிருந்ததில்
இரு சோடி சிறகுகள்
சிதறிக்கிடந்த இடத்தில்
ஆண் பெண் தோழமைப்புனிதம்
பற்றி பட்டிமன்றம் செய்தார்கள்

வேடிக்கை வேதனை

எழுதியவர் : அர்த்தனன் (10-Feb-17, 2:10 pm)
சேர்த்தது : அர்த்தனன்
பார்வை : 96

மேலே