பிரபஞ்சம் நேசிக்குதே என் ஒளியை யாசிக்குதே

வான் நிலவாய் நானோ இவ்விடம்
வசைப்பாடும் விண்மீன் கூட்டமோ என்னிடம்
தினம் தினம் தேய்கையில்
வசைபாட்டும் இம்சை இசையாய் கேட்கையில்
என் அதிகார ஒளியும் மங்கியதே!
மெல்ல மெல்ல தேய்ந்தேனே
ஒன்னும் இல்லா இருளாய் ஆனேனே
வசைப்பாடும் கூட்டமோ என்னைவிட்டும்
விண்ணைவிட்டும் வீழ்ந்து
மண்ணை தொட்டதே!
காரிருள் உணர்த்தியத்தன்னிலை
உணர்ந்தேன் ஒளியின் உன்னதநிலை
மங்கிய மதிக்கு ஒளிவேண்டி
மறுபடி பிறந்தேன் முழுமதியாய்!!!
பிரகாசிக்கும் என் ஒளியை பிரபஞ்சம் நேசிக்குதே
வசைப்பாடிய விண்மீன்கூட்டமோ மீண்டும்
என் ஒளியை யாசிக்குதே!

எழுதியவர் : புதுக்கவி2016 (10-Feb-17, 1:06 pm)
சேர்த்தது : puthukavi2016
பார்வை : 210

மேலே