திரவத்தங்கம்

திரவத்தங்கமே..
அரை மணித்துளியில்
ஆவியாகப்போகும் நீ
அகிலத்தோர் அகத்தினில்
அழியாமல் அமர்ந்து விட்டாய் !
வெயில் பட்டவுடன்
வெறுமையாகப்போகும் நீ - அதே
வெயில் காக்கும் வேந்தனாய்
அடைக்கப்பட்ட ஏசி காருக்கும்
அடித்தளமாய் அமைந்திட்டாய் !
உண்மைதிப்பை நீ கூட்டி
உயரப்பறக்கும் விலையால்
வறியவர் தம் வசதிக்கு
வளைந்து கொடுக்க மறுக்கிறாய் !
அரசியல்வாதிகள் கைகளில்
அடைக்கலம் ஆனதும் நீ
ஏழைகளுக்கு எட்டாமலும்
ஏகாதிபத்தியத்திற்கு எளிதாகவும்
கிட்டவல்ல மாயம் செய்தாய் !
தண்ணீர் போல நீ எங்கும்
தரைக்கடியில் கிடைத்து விட்டால்
இயலாதோர்க்கும் இன்பம் அதை
இரட்டிப்பாக்கி அளித்திடுவாய் !
இந்தியாவில் பிறந்துவிட்டோம்.
இங்கே நீ ஒரு பகடை காயாய்
அரசியல்களத்தில் ஆட்டுவிக்க
அடைத்த வாயுடன் தினம் கிடக்கும்
அடித்தட்டு மக்கள் ஆனோம் !!!