இயற்கை மொழி தமிழ் உணர்வின் மொழி தமிழ் இசையின்மொழி தமிழ் தலைப்பில் அடைக்க முடியவில்லை தலைப்பு அதை சொல்ல வேண்டுமாயின் தமிழ் தமிழின் பிம்பம் கணிதம் வாழ்க்கை நட்பு நாட்டு நடப்பு அன்பு பண்பு பார்வை அதில் படும் வஞ்சக வையம் அதன் வலி கண்ணீர் கதறல் ஓலம் உளறல் உதறல் பரிவு ஏமாற்றம் இனிமை நெஞ்சம் புன்னகை பனித்துளி சூரியன் காலை முதல் இரவு விடிந்ததும் மீண்டும் வாழ்க்கை நாம் பார்க்கும் யாவும் யாவைக்குள்ளும் வாழும் ஆனால் அதை எழுதுவதில்லை சிலது இனிமையாக பாடிவிடும் சிலது ஒரு கட்டத்தில் உடைத்துக்கொண்டு வெளிவரும் கவிதை அதுவாக ஒரு பொழுதும் தானாக அழகாய் வருவது இல்லை பார் தான் காரணம் பிரபஞ்சம் தான் கவிதை இறப்பு அமைதியான கவிதை யாவரும் வரவேற்கும் கவிதை வாழ்க்கை தான் அழகான கவிதை கவிதை என்பது தனி அல்ல இவை எல்லாம் சேர்ந்தது கற்பனையின் உணர்வு
எப்படி எடுத்துக் கொள்வாய்
கவிதை யாவும் பார்த்து .....
நீ மிகவும் கொடுத்து வைத்தவனாம் .....
உன்னை தனதாக்கிக் கொள்ள நான் அல்லவா தவம் செய்திருக்க வேண்டும் .....
யாரையும் ஏறெடுத்து பார்க்காதவள்.எதற்கும் பல் இளிக்காதவள் ........
என் பாதையில் நான் பயணிப்பேன் .....
எனக்கு பிடித்ததெல்லாம் என் குடும்பம் இயற்கை இசை என் தோழிகள் ....
வழியில் கல் இருந்தால் எடுத்து போடுவேன் ...
யார் வாழ்க்கையிலும் கல் போட்டதில்லை .....
மூக்கை நுழைக்க மாட்டேன் அனாவசியங்களில்
நான் நானாக வாழ்கிறேன்.....
எப்படி கவிதை
என்று கேட்டால்
தமிழ்
இயற்கை
இசை
பறவை பறக்கிறது கவிதை எல்லாம் இதன் முன் ஏதும் இல்லை
அலை அடிக்கிறது இயற்கையின் இசை ......
திருக்குறள் தமிழ் அள்ளி பருகி முடிக்க முடியா அமுது ......
காதல் கவிதை இதுவரை எழுதியது இல்லை ....
எழுதிய யாவும் கற்பனை ......
அப்படி என்ன பெரிய காதல்
காலம் காலமாக அரைத்த மாவைத் தானே .....
அதில் நான்
இப்படி என் கணவர் இருக்க
நான் அவருக்கு பக்கத் துணையாக வாழ்விலும் சாவிலும் உடன் இருப்பேன் என்று என் தமிழ் தாய் ...அவளின் பண்பாட்டில் வளர்ப்பில் எனக்குள் உருவானது ......
சமூகத்தில் நான் பார்த்த கேட்ட அனுபவித்த அவலங்கள்
எழுத்துக்களாய் .....
சமூக கவிதை வாழ்க்கையில் நாம் பார்ப்பதே .....
ஊக்கக் கவிதை
அது தன்னம்பிக்கை .......
ஏக்கக் கவிதை வறுமை ......
பாசக் கவிதை அன்பு ......
மகிழ்ச்சி கவிதை நட்பு......
உலகக் கருத்து வாழ்க்கை ........
எல்லாவற்றிலும் எல்லாமும் இருக்கிறது
அது இங்கேயே பிறக்கிறது....இங்கேயே வாழ்கிறது.....இங்கேயே நிலைக்கிறது.....இங்கேயே நிற்கிறது .....
அது பிரபஞ்சமும் அதன் மனித வாழ்வும் ....அதில் ஓட்டமும் பிரதிபலிப்பும் ....மனித உணர்வும் ,,,,உண்மையும் .....கற்பனையும் .........
அருள்மொழி வர்மா
உன்னை எனக்கு எப்படி பிடிக்கும் என்றால் பொன்னியின் செல்வன் ........
நளனே உன்னை எனக்கு ஏன் பிடிக்கும் ஏன் என்றால் நான் தமயந்தியாக இருந்து உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் .........
நான் உன்னை காதலிக்க வில்லை இந்த தருணம் வரை .....
காரணம் என் தந்தை தாய் இன்னும் என்னை உன் கரத்தில் ஒப்படைக்க வில்லை ......
இன்றைய காதல் போல் முகம்.....பணம் .....புகழை ......உடலை காதலிக்கவில்லை.....
என் உயிருக்கு உருவம் கிடையாது
என் உணர்வுக்கு உருவம் கிடையாது ....
அந்த உயிரும் உணர்வும் சேர்ந்த ஒளி நீ .....
எனக்குள் என் ஆத்மா நீ .....