காதல் வந்து கொல்லுதடி

உன்னை கண்ட நொடி
காதல் வந்து கொல்லுதடி!
உன் கை தொட்டபடி
காலம் செல்ல ஏங்குதடி!

விண்ணை முட்டும்படி
எந்தன் உள்ளம் போனதடி !
நிலவும் உன்முன்னே
துடித்து மடிந்திட!

என்னை விட்டபடி
உந்தன் காதல் போனதடி!
இதயம் என்னுள்ளே
வெடித்து சிதறிட!

பூவே பெண் பூவே
நீயின்றி நானில்லை
என்பதெல்லாம்
பொய் ஆனதடி!

உன்னை கண்ட நொடி
காதல் வந்து கொல்லுதடி!
காதல் மறித்து போனதடி!

எழுதியவர் : தங்கராஜா. ப (10-Jul-11, 7:25 pm)
பார்வை : 367

மேலே