அமேசான் போல நீண்ட....
மதியத்தூக்கம் கலைந்து
கண்ணைக்கசக்கும் விரல்கள்..
எழச்சொல்லும் புத்தி..
விழவே சொல்லும் மனசு..
விட்டத்தைப் பார்த்துக்கிடக்கும்
வெற்று நிமிஷங்களையும்
தொற்றிக்கொண்ட தோரணையாய் உன் நினைவு!
கண்மூடிக் கைகூப்புகையில்
பிரார்த்தனையில் சேர்ந்து கொண்ட உன் பெயர்!
கடற்கரையில் கால் வைத்தால்
அலைகளின் நுரைகளில்
வலைவிரித்து நான் தேடும் உன் பாதத் தூசிகள்!
இதிலெல்லாம் ஒளிந்திருக்கலாம்
அமேசான் போல நீண்ட என் காதலின்
அஞ்சாறு துளிகள்...
-நடராஜன் மாரியப்பன்