மீண்டும் தொடரும்

கால் கடுக்க காத்திருந்தேன் உன்னை காண
கண்டவுடன் என் மொழி எதையும் கூறவில்லை
என்றும் போல இன்றும் உன்னை பின்தொடர
என் பாதங்கள் தயாராயின ............

பின் தொடரும் என்னை தெரிந்தே தெரியாததுபோல்
நீ நடந்தாய்
உன் கால்கள் முன் சென்றாலும்
உன் மனம் என் பின்னே தான் வருகிறது என்பதை
நான் உணர்ந்தேன்

உன்னை தீண்டி வரும் தென்றலை நான் தேடினேன்
என் மூச்சை கூட பெலமாக இழுத்தேன்
அல்பனாய் ........

உன் பின்னால் வரும் போது சாலையின் தூரம் கூட
என் நினைவில் இல்லை
உன் இதழ் அசைவை பார்த்து அடிக்கடி மீண்டும் பிறப்பேன்
நானும் ஒரு ரசிகன் என்பதை நானறிந்தேன்

வளைவுகளில் நீ திரும்பும் போது
உன் ஒரு பாதி கண்டால் போதும்
முடிந்தது என் இன்றைய தரிசனம்!!!!!

மீண்டும் தொடரும் ............

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத
என் காதல் மீண்டும் தொடரும் .......

எழுதியவர் : Taara (13-Feb-17, 3:47 pm)
சேர்த்தது : தாரா சுரேஷ்
Tanglish : meendum thodarum
பார்வை : 99

மேலே