மறுமையைத் தேடி
இலையுதிர்
காலம் போல்
காலன்
எடுத்து விட்ட உயிர்
போன உயிரால்
பட்டுபோன மலர் போல்
மண்ணில்
படுத்து விட்ட உடல்
மனித வாழ்வில்
மரணத்தில் மட்டுமே
ஏற்றத் தாழ்வு
இல்லாத நேரம்
காலும் வாயும்
கட்டு பட்டு
மலர் மாலை
துணையோடு
காலமானதைக்
காட்டும் மரணம்
பயணம் தொடங்கும்
மறுமையைத் தேடி.