நந்தவனப் பூக்கள்

நந்தவனப் பூக்கள் !!!!


நந்தவனப் பூக்களினை
நட்டுவைத்தவர் யாரோ !
நடைபயிலும் மக்களிடம்
நலத்தினையும் கேட்பாயோ !
நளினமிகு எழிலரசி !
நாடிவந்தால் மணம்வீசும் !
நர்த்தனங்கள் பூக்களுக்குள்
நறுமுகையுடன் ஆடிவரும் !
நாள்தோறும் காதலினால்
நடந்துவரும் சோடிகளுக்கு
நளினமாக ரோஜாவை
நாணத்தோடு கொடுப்பதற்கு !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Feb-17, 1:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 133

மேலே