வெற்றி நிலா
ஏண்டா மவனே
மணிமாறா,
பாப்பாவுக்கு என்ன
பேருடா வச்சிருக்க?
☺☺☺☺☺☺☺
நான் எந்தக் கட்சின்னு
உங்களுக்குத் தெரியுமா?
😊😊😊😊😊😊
தெரியுமே, நீ எலக் கட்சி.
அந்தக் கட்சி உருவான
போது நீ என் வயித்தல
இருந்த. உங்கப்பா
இரண்டு கையிலயும் பச்ச
குத்திட்டாரு.
உனக்கு 32 வயசல
கண்ணாலம் ஆச்சு.
அதெல்லாம் பழைய கதை.
எஞ் செல்லப்பேத்தியோட
பேரு என்னன்னு
சொல்லுடா மணிமாறா?
😊😊😊😊😊😊😊😊
அம்மா, உங்க அழகான
செல்லப் பேத்தி பேரு
ஜெயசசி.
☺☺☺☺☺😊😊😊
என்னது செயசசியா?
என்னமோ இந்திப் பேரா
வச்சிருக்கற?
அந்தப் பேருக்கு என்னடா
அர்த்தம்?
😊😊😊😊😊😊😊😊
அம்மா "ஜெய"-ன்னா
"வெற்றி".
"சசி" -ன்னா "நிலா".
😊😊😊😊😊😊😊😊😊
ஓ..... எம் பேத்தி பேரு
"வெற்றிநிலா"வா?
அர்த்தம் எல்லாம்
நல்லாத்தான் இருக்குது.
ஆனா நம்ம பிள்ளைக்கு
நாம பேசற தமிழ்ப் பேர
வைக்காம இந்திப் பேர
வச்சா இந்திக்காரங்க
நம்மளக் கேவலமா
நெனைப்ப்பாங்கடா?
"வெற்றிநிலா" எவ்வளவு
அழகான தமிழ்ப் பேரு.
டேய் மணிமாறா, அந்த
செயசசிங்கற இந்திச்
சொல்லி நம்ம
தாய்மொழிய நாங்
கேவலப்படுத்தமாட்டன்டா.
தாயவிட தாய்
மொழிதாண்டா
உயர்ந்தது. தாயி
உன்னோட கடசி
வரைக்கும்
இருக்கமாட்டாடா. ஆனா
தாய் மொழி உன்னோட
உயிரு உள்ளவரைக்கும்
உங்கூடத்தாண்டா
இருக்கும்.
@@@@@
என்ன மன்னிச்சுங்க
அம்மா. எங்க அரசியல்
அம்மாகூட பேரு
வைக்கச் சொல்லி
மேடைக்கோ, அவுங்க
வாழ்ந்த வீட்டுக்கோ
கொண்டுவந்தா எந்தக்
கொழந்தைக்கும் தமிழ்ப்
பேர வச்ச மாதிரி நாங்
கேள்விப்படலம்மா.
அதனாலதான் நானும்
மணிமொழியும்
தவமிருந்து பெத்த எங்க
செல்லத்துக்கு இந்திப்
பேர வச்சுட்டம்மா. உங்க
தமிழப் பற்று என்ன
திருத்திருச்சும்மா.
இன்னும் பாப்பா பேர
நகரசபையில பதிவு
பண்ணலமா. நான்
நாளைக்கே போயி, பாப்பா
பேர "வெற்றிநிலா" -ன்னு
மாத்திட பதிவு
பண்ணிடறம்மா.
☺☺😊😊😊😊😊
இப்பத்தாண்டா
மணிமாறா
எனக்கு ரொம்ப
மகிழ்ச்சியா
இருக்குது.
@@@@@@@@@@@@@@@@@@
நம் மொழி
செம்மொழி
சீரிளமை குன்றா
உலகின் முதன் மொழி.
எம்மொழியையும்
குறை சொல்லும் பண்பு
எனக்கில்லை.
தாய் மொழியே
தமிழருக்கு உயர்ந்து
என்று நான் நினைப்பதோ
சொல்வதோ
நம் பிறப்புரிமையாகும்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Jaya = Victory.
Sasi = Moon☺☺☺☺☺☺
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஐயம் இருப்பவர்---->>>
இண்டியாசைல்ட்நேம் ஸ்காம் -ல் பார்க்கவும்