அம்மாவானேன்

அமைதியாய் பார்க்கிறேன் ..........!!!
அவர்களை!

பதட்டமாய்........ சுவரோடு சுவராய்,
அழகிய ஓவியமாய் இரு பிஞ்சு குழந்தைகள்!

அள்ளியணைத்து முத்தமிட்ட தாய் இழந்து,..
.தன் வளர்ப்பு தாயின் தேடுதலே
என் பெண்பார்க்கும் படலம்!!!..........

நான் உற்று நோக்குகிறேன்...

அக்குழந்தைகளின் பார்வை மருண்டு, அழுக தயாராகிறது!..
நீங்கள் வேறுஇடம் பாருங்கள் என் பெண்....- இரு குழந்தைகளுக்கு அம்மாவா!????
என அம்மா சுருதி ஏற்றி கத்துகிறாள்...

கூட்டம் கலைகிறது!..

என் பார்வை மட்டும் அக்குழந்தைகள் மேல்!!

அழகிய பிஞ்சுகள் ஒன்றுக்கொன்று
கரம் சேர்த்து! என்னை ஏக்கமாய் பார்க்கின்றன!

அந்நொடியில் நான் அம்மாவானேன்....!

இனி யார் கேட்டாலும் இவர்களின் தாய் நான் !மட்டுமே!!!

ஆரதழுவி முத்தமிடுகிறேன்....
அந்நொடியில் முக்தியடைகிறேன்..............!

எழுதியவர் : விஜயராணி (17-Feb-17, 3:24 pm)
பார்வை : 101

மேலே