காதல் ஊஞ்சல்

என்னிதயத்தை சலவை செய்து
இளம் காதல் கொடியில் உளர வைத்து
என்னுயிரை பூவாய் நினைத்து
பறித்து சூடிக்கொண்ட பூவையே....
நீ எனக்கு தேவையே...தேவதையே..
உன் செவ்விதழ் திறந்து சொல்
அந்த ஒற்றைச் சொல்லில்தான்
என் வாழ்க்கை துவக்கம்..!

கண்ணால் பேசியது போதும்
செவ்விதழ் நீ திறப்பது எப்போது...?
அதுவரை என்னுயிர்...
இப்படிதான் ஊஞ்சலாடும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Feb-17, 11:50 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : kaadhal oonjal
பார்வை : 269

மேலே