காதல் சாவி தேடும் இதயப்பூட்டு

அமுக்கு பூட்டை பூட்டுவதற்கு
வேண்டுமோ ஒரு சாவி...

என்னிதயக் கதவை
வந்தென்று திறக்குமோ
உன் காதல் மெளனச் சாவி?

கண்டவுடன் புன்னகை பூ
பூக்குதே உன்னிதழ்

பேசத்தெரியாத ஊமையாய்
இல்லையே உன் விழிகள்...
செவ்விதழ் திறந்து
சிந்தினால் என்ன?
தேன் காதல் மொழிகள்..

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Feb-17, 12:15 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 535

மேலே