விவசாயிகள் தற்கொலை, நிறுத்துங்கள்
விவசாயிகள் தற்கொலை, நிறுத்துங்கள்!
கோமணத்தை ஆடை என்றும்
குடிசையை வீடு இன்றும்
நிலத்தை தாய் இன்றும்
வானத்தை தெய்வம் என்றும்
பயிரை உயிரென்றும்
சொல்லும் பெருமக்களே
தங்கள் உயிர் மட்டும்
மயிர் என்று நினைத்தீரே?
போதும் ஐயா, நிறுத்துங்கள் தற்கொலையை!
உலகிற்கு அன்னமிட்ட கைகள்
கன்னத்தில் பதித்து
சோர்ந்து போய் இருப்பதை
மற்றவர் பார்த்துவிடக்கூடாது என்று
தற்கொலை செய்து கொள்கின்றீரோ?
நிறுத்துங்கள் தற்கொலையை!
சல்லிக்கட்டு முடிந்ததும்
அரசின் பார்வை
உங்கள் வயக்காட்டில் தான்!