காட்டில் காலம் மாறிப்போச்சி
நயவஞ்சக நரிகள் கூட்டம்
காட்டிலே சுத்துது
அது கணவான்களின்
காதிலே பூ சுத்துது
பனங்காட்டு நரிகள்
பணம் தேடி அலையிது
அது குணம்கெட்ட
மிருகங்களோடு
கைகோர்த்து நடக்குது
பலம் கொண்ட சிங்கத்தையே
தந்திரமாக வீழ்த்தி
தனக்கென்று தனி
காட்டாட்சி நடத்த பாக்குது
வாக்களித்த வானர்கூட்டம்
வாடிப்போய் நிக்குது
சுதந்திர காட்டின் அடிமைகளாக
செய்வதறியாமல் திகைக்குது...