ஜல்லிக்கட்டு

தடை அதை உடைத்து
எங்கள் தரத்தினை உயர்த்து,
சிகரம் தொடும் போல் சீறும் காலை,
எகிறி பிடிப்போம் இது எங்கள் பாரம்பரிய விளையாட்டு,
வீரம் ஊறும் மண்ணிது
தமிழ் ஆறாய் ஓடும் மனம் இது,
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் நாம் தமிழரென ஒன்றுபட்டு தோழர்கலாய் வாழுகிரோம்,
தமிழ் எங்கள் குருதியிலே ஊறும் அதற்க்கு களங்கமென வந்தால்
எங்கள் நெஞ்சமெல்லாம் சீறும்,
நான் என்ற சொல்லில் நாமாய் இறுப்போம்,
தேனூறும் தமிழிலே
நா ஊறும் தமிழ்ப்பாட்டிலே,
வீரத் தழுவல் செய்திடுவோம்,
சீறும் காளையை அடக்கிடுவோம்,
பெருமையோடு சொல்லிடுவோம் இது எங்கள் பாரம்பரிய விளையாட்டு.

எழுதியவர் : அப்துல் சிவப்பு ரோஜா இரசி (20-Feb-17, 12:53 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 154

மேலே