நேசம் என் தேசத்திற்கு மட்டுமே

படைத்தவனுடன் கைகோர்க்க வான்தொட்டது இமயம்
மொழிகள் பலகண்டும் பேதமில்லா சமயம் .
வளைக்கரம் எங்கள் வாழ்க்கை சொல்லும்,
கலைஅறுபதில் எங்கள் புலமை வெல்லும்;
சோழர்களின் கர்வத்தில் கோபுரங்கள் தலைத்தூக்கும்,
தாஜ்மஹாலின் அழகில் உலகம் அயர்ந்துநிற்கும்
இளைஞர்களின் எழுச்சியை அகிலம் திரும்பிப்பார்க்கும் ,
உயர்கிறது நாடு நம் உணர்வுகளோடு !!

கைகோர்க்கையில் அனைவரும் ஒன்றே
வியந்தது புவி இதுதான் தேசம் என்றே !
ஓயவில்லை எங்கள் மாட்சிமை இன்னும்
அகிம்சை போர்க்களத்தில் எங்கள் வீரம் மின்னும்
வானவில் போல்பல வண்ணங்களும் உண்டு
வான்தொட்ட 104 ஏவுகணைகளும் உண்டு.
உழைப்பே வாழ்க்கையாக ;
பாரம்பரியம் பழக்கமாக
அமைதியே அறமாக ;
வந்தாரை வாழவைக்கும் குமரியில் கால்நனைபோம் ;
பெருமைமிகு இந்தியர்களாக !!!

எழுதியவர் : (19-Feb-17, 11:26 pm)
சேர்த்தது : Deepthi
பார்வை : 63

மேலே