வீரத்தமிழ் இளைஞன்

வீரத்தமிழ் இளைஞன்:

முதலில்,
கடற்கரையில் உள்ள படகுகள் அளவு இருந்தபொழுது, பார்க்க யாரும் வரவில்லை.
ஊடகங்கள் உதறின!
அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தினர்!

பின்பு,
எழுந்தாய் வீரத்தோடு, கடற்கரையில் உள்ள மணல்துகள் அளவிற்கு, மஞ்சுவிரட்டிற்கு ஆதரவாக, மெரினாவில்..!
மத்திய அரசே மிரண்டது!
அரசியல்வாதிகள் ஆட்டம் கண்டனர்!

தமிழனின் வீர விளையாட்டை விரும்பி,
நீ செய்த போராட்டம்,
விலங்குநலன் என்ற போர்வையில்,
கொள்ளை லாபத்திற்காக தடை வாங்கிய,
வெளிநாட்டு வியாபாரிகளுக்கு வியர்த்தது!

இலட்சம் பேருக்கு மத்தியிலும்,
மங்கைக்கு நீ அளித்த மரியாதை,
பெங்களூருக்கும், புதுடெல்லிக்கும் பாடம் புகட்டியது!

எந்நாட்டில் இருந்தாலும், தமிழ்நாடே நம்நாடு என உலகதமிழர்கள் இணைந்தனர்!
இலங்கை தமிழர்களுக்காக நீ போராடியது போல்,
இலங்கையிலுள்ள தமிழர்களும் ஏறு தழுவ போராடினர்!

இவர்களால் என்ன செய்ய முடியும் என்று, பல்
இளித்தவர்களுக்கு, இன்று உன் போராட்டம்,
இனிமா கொடுத்தது போல் ஆனது!
அரண்டு போய் அரசாங்கம் அவசர சட்டம் இயற்றியது!

தமிழனுக்கு ஒரு பாதிப்பு என்றால்,
ஒன்றிணைவோம் எனும் வீரத்தை விதைத்துவிட்டாய்!
இன்று இது வரலாற்றுப்பக்கத்தில் பதிக்கப்பட்டது!
காலம் இதை ஒருபோதும் மறக்காது!

வாழ்க தமிழ் கலாச்சாரம்! வளர்க தமிழ் பண்பாடு!
வென்றது தமிழ்! வியந்தது தரணி!

-அகரன்.

எழுதியவர் : அகரன் (20-Feb-17, 1:57 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 87

மேலே