நெற்காட்டு ஆவிகள்
............நெற்காட்டு ஆவிகள்......
சதை கிழியவே
சமாதிகள் சபை யமைத்தது......
சபை நடுவே சாபாத்தால்
நெய்யப்பட்ட கதவுகள்
சம்மதம் அளிக்கவே
சாமான்யமும் சிலுவை யேறியது......
கழுகில் ஏறியே
கழுவி லேற்றப்பட்டது....
சமாதிக்கதவுகள் திறந்ததும்
தீர்ப்பு மொழி செயலிழந்து படுத்திருந்த பிணங்கள்
பேசத் தொடங்கியது........
நியாயக்கொள்ளிகளுக் கிடையில் திடுக்கென முளைத்து கதறிய பதர்கள் யாவுமே
சூரியக்கொள்ளையில்
கருகிக் கிடந்தது........
கண்டது மாயைக்கனவென்று
கருகிய சமாதிக்கு
மண் அள்ளித்தூவியது
மன்னர் மட்டுமல்ல.......
மன்னர் முன்
மண்டியிட்டு நொண்டியான
மாக்களும் தான்.....