இறைதூதன்

இறைதூதன்...
தச்சனின் தவமோ
பச்சிளம் பாலகனாய்
இச்சையின்றி பிறந்தவனோ
வைக்கோல் பட்டறையில்
வைத்தியருமில்லாமல்
வையத்தின் மீட்சிக்காய்
வைரமொன்று பிறந்ததுவோ
தொழுவத்தில் தோன்றியவன்
தொழுதற்கு உரியவன்
தோள்கொடுத்து நின்றவன்
தோன்றிய நாளிதுவோ
சொல்வாரி சொரிந்ததனால்
அல்லல் அடைந்தவனோ
கல்வாரி மலையினிலே
கல்லடி பட்டவனோ
சிலுவைக்குள் அறைபட்டான்
சிகரத்தில் உறைபட்டான்
சிந்தைக்குள் நினைத்து
சிரசு சாய்த்து நிற்போம்...

எழுதியவர் : (21-Feb-17, 9:48 am)
சேர்த்தது : சி ஜெயராணி
பார்வை : 62

மேலே