புதுவருடம்

புதுவருடம்...
நீங்கா நரயம் நீங்கி
நிலைகொள் வளம்பெருகி
விறல் வாகை மலையவும்
திறம் ஓங்கி மலரவும்
குழவி மருண்டஞ்சி
குழையும் நாள் ஒழிந்து
புன்கண் புலனுழுது
இன்னல் அறுத்து
பேதைவாழ் ஓம்புமின்
கீதை பறைசாற்றி
இதயங்கள் இளகி
இறையருள் பரவி
உவகையோடு இனியாவது
உலவுக புதுவருடமே..