என்னுள் முரண்பட்டவனாய்
பார்வையெனும் தூண்டிலால்
நெஞ்சத்தைத் தூண்டிவிடும்
மைபூசிய கயல்களின் கதிர்கள்
இயல்பாகவே கிடைக்கட்டுமென்று
முடிவு செய்திருந்தவன்.
திட்டமிட்டே செல்கிறேன்
அவள் வரும் இடங்களில்
அவள் வரும் காலங்களில்
எவ்வளவோ ஆசையுடன்
என்னுள் முரண்பட்டவனாய்.
ஏதோ ஒரு இடைவெளியில்
அந்த கயல்களைக் காணநேர்ந்து
அதன் கதிர்கள் முட்டும்முன்னே
என்பார்வைகளைத் தடம்மாற்றி
தவிர்த்துவிட்டு வந்தேன்…
என்னுள் முரண்பட்டவனாய்...