துளி துளியாய் துரோகம்

பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும் முகம் , போட்ட சுடிதார் கசங்கியோ , விலகியோ என்றுமே பார்த்தது இல்லை, கண்களில் எப்பொழுதும் ஒரு பயம் , பார்ப்பவரை சுண்டி இழுத்து ஆறுதல் சொல்ல வைக்கும் பயம் , நீண்ட கூந்தல் , குங்குமத்தை என்றுமே மறக்காத நெற்றி , பாலில் ரோஜா பூவை கலந்ததை போல நிறம் , கண்களுக்கு குளுமையான சுத்தமான தோற்றம் , நினைத்து இருக்குறேன் இவளை தவறாக நினைத்தால் சாமி கண்ணை குத்தும் . ஒரு வார்த்தையில் சொன்னால் தேவதை . பழக்கத்தால் கரைந்து , பார்த்து பார்த்து உருகி , சுண்டு விரலை பிடித்து கொண்டு வாழ்கை வாழ்ந்து விடலாம் என இருக்கையில் தெரிய வந்தது தேவதையின் மறுபக்கம் .

ஏய் !
சும்மாதான் !
என்ன பண்ணுற !
நான் முக்கியம் இல்லையா!
பேசமாட்டியா !
செல்லம்தானே!
எனக்கு ஒரு கதை சொல்லு !
நீதான் வேணும் !
அப்படித்தான்!
ஒரு முத்தம் கொடேன் !
எப்பவும் பக்கத்தில் இரு !
பயமா இருக்கு !
கை பிடிச்சுக்கோ!
போய் தூங்கு !
நானும் தூங்க போறேன் !

எனக்கானது என
பக்குவமாய்
சேர்த்து வைத்த
நியாபகங்களும் , வார்த்தைகளும் !
அதே இரவின்
பிற்பகுதியில்
வேறொருவனுக்கு
சொல்லக் கேட்டு !
யாருமில்லாத தனிமையில்
சுய பச்சாதாபம் மேலோங்க
அடக்க முற்படும்
கட்டுப்பாடு இல்லாமல்
பொங்கி வழிந்தது
துளி துளியாய்
துரோகம் !

- பாவி

எழுதியவர் : பாவி (21-Feb-17, 9:51 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 188

மேலே