அழிந்துவரும் பாரம்பரியம் - குறுங்கவிதை

அழிந்து வரும் பாரம்பரியம்


அழிந்துவரும் பாரம்பரியம்
அழியாமல் காத்திடுவோம் .
பழையசோறும் பச்சைமிளகாயும்
பங்கிடுவோம் பலருக்கும் .
கழிந்தனவே வாழ்க்கையுமே
காலம்தான் மாற்றியதோ !
பழகியதோர் நல்வாழ்க்கை
பரிதவித்துப் போனதுவே !
அழகியநாள் அற்றைநாள்
அனுபவிக்க இனிவருமா !!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Feb-17, 1:48 pm)
பார்வை : 256

மேலே