கேவலம்

எத்தனை எத்தனை பாவங்கள்
என் கண் முன்னே இறைவா..!
நெஞ்சம் கொதிக்கிறது
ஈனப்பிறவியின் செயலைக்கண்டு..!

காம பசிக்கு புனிதத்தை
விலைகொடுக்கிறாயா...?
தாய்மையும் ஆண்மையும்
கேவலமாய் போய்விட்டதா
ஈனப்பிறவிகளே...!

கற்புக்கு அரசிகளாய்
ஒழுக்கத்திற்கு ஆண்மகனாய்
வாழும் உலகில்
கருமங்களுக்கும் பஞ்சமில்லை
கர்மங்களுக்கும் மிச்சமில்லை...!

யாதும் அறிய சிசு
மடிந்து கிடக்கும் இடத்தில்
ஊர் கூட
பிணம் திண்ணி கழுகுகள் வட்டமிட
நாய்களும் நரிகளும் கடித்து தின்ன
அழுகிய நிலையில் இறந்து
நகரத்தில் நரக வேதனை அடைவாய்...!

அதே சாக்கடையில் செத்துப்போ...!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (22-Feb-17, 2:33 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kevalam
பார்வை : 654

மேலே