அடங்கா அழகே

மிரள மிளிர்பார்வை
நிலங்கணா நிமிர் நடை

கூரென்றில்லா குவளை முகம்
நறுக்கா நறுங்குழல்

துடுக்கா துறவா மழலை
வேரறுக்க வெள்ளைமனம்,

பொறுக்கா புறங்கூறல்
தடம்மாறா தனல்நெறி

பசப்பா பண்பார்ந்த மொழி
அடங்கா அழகே

பகன்றது பதமே
புறந்தள்ளாதே புகழுரையென்று

அகந்தனில் விழ்ந்த அமிழ்தம் நீ
அறிந்து ஆனால் ஆயந்தல்ல - விரும்பு .

எழுதியவர் : ராஜா (22-Feb-17, 4:22 pm)
பார்வை : 161

மேலே