தூக்கம்

தூக்கம்!
சுறுசுறுப்பாய் வேலைபார்த்த களைப்பில்
சோளத்தட்டை படப்போரம் கட்டாந் தரையில் படுக்கிறான்.
ஆழ்ந்த தூக்கம்!
பஞ்சுமெத்தையில் கொடுத்த பணத்திற்கு
வந்த வட்டியை நினைத்துக்கொண்டே புரண்டு படுக்கிறார்,
அளந்த தூக்கம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:27 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 155

மேலே