ஈழத்தின் இசைக்குரல் ஓய்ந்தது

இந்த மண் எங்களின்
சொந்தமண் என்று
உரிமை வரிகளுக்கு
உயிர் தந்த ஈழத்தின்
காந்தக்குரலோன்
சாந்தன் அந்த
மண்ணுக்கே வித்தாகினான்.....!!

பிணியின்
பிடியில்
இருந்தாலும்.....காலச்
சூழல்
சாலச்சிறந்த
பாடல்களை
ஈழத்தின் நினைவுகள்
தந்து
தூங்குகிறான்......!!

எதிரிகளின்
பாசறையை
தேடிப்போகிறோம்
என்கிற..... பாடலை
பாடிக்கொண்டு
தேடியழித்த
எதிரியின்
பாசறைகள்
இங்கு ஏராளம்.....
உமக்கும் சமர்ப்பணம்.....!!

ஆழக்கடல்
எங்கும் சோழமஹராயன்
என்று
தொடங்கி.....
தள்ளிவலை ஏற்றி
வள்ளத்தில் ஈழத்து
மீனவனின்
வாழ்வு சொன்னவன்
வாழ்க்கை
முடித்து
மௌனமானான்.....!!

கரும்புலிகள்
என நாங்கள்
என்று
பாடி.....கரும்புகைக்குள்
காவியமான
களவீரர்களின்
கானம்
தந்தவன்.....இவனும்
ஈழப்போராளியே......!!

பக்திப்பரவசத்தில்
கூட
கட்டிப்போட்ட
இறைப்பாடல்களும்
இவனின்
குரலில்
குறைவில்லை......!!

ஈழத்தில்
பிறந்த
எவருமே
மறந்திடமுடியாத
இவனின்
கானங்கள்......
என்றென்றும்
எம்மோடு
பயணிக்கும்.....!!

ஈழத்தின்
தலைசிறந்த
பாடகர்
சாந்தன் அவர்கள்
இன்று...... சிறுநீரக நோயின்
காரணமாக இறைவனடி
சேர்ந்தார்....

அன்னாரின் ஆத்மா
சாந்தியடைய
ஆண்டவனை
பிரார்த்திப்போமாக.....!!

ஓம் சாந்தி.....!
ஓம் சாந்தி......!!
ஓம் சாந்தி......!!!

எழுதியவர் : thampu (26-Feb-17, 5:04 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 92

மேலே