பணத்தை உண்ணவே முடியாதென்று நீ அறியாயோ

பிழை பிழையாகுமோ ?
வாழ்க்கை மீளுமோ ?

யாவும் பிழையே
நானும் நீயும் விதி விலக்கு


அன்னை தமிழுக்கும்
அங்கே தமிழர்க்கும்
காலம் காலமாய் சதியின் பிழையால்
பிழைகள் சதுராடுதே ...

காட்டாற்று வெள்ளமாய் ஓடு
காலத்தே விதைத்திடு
வாழும் வாழ்க்கைக்கு பொருளாகிடு
நாளும் நன்மை செய்திடு
வாழ்வாங்கு வாழ்வாங்கு செழித்து எப்பொழுதும் எங்கேயும் வாழட்டும் எங்கள் செந்தமிழ்



தமிழே மனிதம்
மனிதனே தமிழன்

*****
குறிப்பு ; தலைப்பு - அச்சமில்லை அச்சமில்லை அதனுடைய வரி...
உண்மையும் அதுவே ...
அதை யாவரும் உணர்ந்து விட்டால்
மனிதம் எங்கும் வாழும் ...
பெண்மை மதிக்கப்படும் ....
இயற்கை செழிக்கும் ....
பூமி சிறக்கும் ....
உலகம் உண்மையாகும்
அதில் உயிர்கள் நன்கு வாழும்
பூமி புதிதாய் பிறந்த தூய குழந்தையாகும்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-17, 7:52 pm)
பார்வை : 49

மேலே