இறைவி
பத்து வினாடியில் பத்த வைக்கிறாய்
கத்து கொடுக்காமல் கற்க வைக்கிறாய்.
இருண்ட இதயத்தை ஒளிர்க்கவைக்கிறாய்...
ஏதேதோ எண்ணங்களை துளிர்க்கவைக்கிறாய்...
ஒரு கண்ணால் என்னை கொன்று தீர்க்கிறாய்
மறு கண்ணால் என்னை வென்று தீர்க்கிறாய்...
வந்தால் என்னுள் ரசாயன மாற்றம் தூண்டி ஆலையாய் மாற்றுகிறாய்...
இல்லையேல் ஆள் அரவம் இல்லா சாலையாய் மாற்றுகிறாய்...
பார்த்தாலே கொஞ்சம் குமரி
கதைத்தாலோ கொஞ்சும் குருவி...
சிரித்தாலே கொட்டும் அருவி...
சென்ற உயிரை நீ கொஞ்சம் தருவி...
உயிர் தந்ததால் நீயும் ஒரு இறைவி....