காத்திருக்கும் என்வாசல்படி உனக்காக 555
என்னவளே...
என்னுள்ளே நீ வந்தாய் என்
இதயத்தில் குடிகொண்டாய்...
நந்தவன சோலையிலே நீ வந்த
நேரம் வாசம் எங்கும் வீசுதடி...
வளம் கொழிக்கும்
தமிழ்நாட்டில் பிறந்தவளே...
வாய்விட்டு உன்னிடம்
நான் கேட்டும்...
நீ கொடுத்தாயடி சில
முத்தங்கள் மட்டுமே...
கஞ்சத்தனம் கொண்டவளே மிச்சம்
எப்போதடி கொடுக்க போகிறாய்...
கைபேசியில் அளவில்லாமல்
கொடுப்பவளே...
நேரில் மட்டும்
கஞ்சத்தனம் ஏனடி...
என்னை கெஞ்சவைத்து பார்ப்பதில்
உனக்கு அவ்வளவு சந்தோசமா...
உன் பாதம் பட என் வாசல்படி
காத்திருக்குதடி...
பூக்கள் அதை உறவுகள் தூவ
நம் மணவரையும் காத்திருக்குதடி...
தம்பதிகளாக நம்மை காண
என் உயிரானவளே.....