என் இனிய யாழினி
நித்தம் நித்தம் வடிவழகே
உன்னை கைகளில் ஏந்தி
இருக்க அணைத்து என்
மடியினில் வைத்து என்
காய் விரல்களால் உன்னை
மெல்ல மெல்ல தடவும்போது
நீ மெய் சிலிர்க்க விந்தைதரும்
செவிக்கும் மனதிற்கும்
துன்பங்களெல்லாம் நீக்கி
இன்பங்கள் சேர்க்கும்
இன்னிசை விருந்தளிக்கின்றாய்
கலைவாணியும் மகிழ்ந்து
உந்தன் ஒலியில் இருப்பாள்
உன்னை யாளென்று அழைத்தனர்
சங்கத் தமிழர் இன்று நீ
வீணை என்ற பெயரில்
என் இணைபிரியா நட்பாய்
இருக்கின்றாய் என் உயிரே
நாதத்தின் உட்பொருளாய்
நீ தான் அம்மா என் இனிய
யாழினி