எல்லாமே நீநாம்
உயிர் உருகும் நேரமெல்லாம் என்னில்
உன் உருவம் வந்து போகுமே! - நீயே
எனக்குள்ளே இருந்து கொண்டாயா?ஓ!
உனைக்காண நாளொன்று இல்லையே!
எனக்குள்ளே ஏதேதோ வந்துபோகும்
எல்லாம் உனையின்றி வேறேயில்லை ! - நான்
உனை பார்க்க வந்துபோது தான்
நீ எனைபார்க்க சென்றிருந்தாயா?
நாம் இருவர் பார்த்த பிறகுதான்
வானில் மழைமேகம் சூழ்ந்துகொண்டது! - எங்கும்
மழைத்துளிகள் நிறைந்து கொண்டிருக்க நமக்கு
மண்வாசனை மனதில் மட்டும்!
ஓராண்டு பழகிய நாள்களில் உன்னோடு
பலஆண்டு வாழ்ந்ததுபோல நினைவு! - உனக்கும்
இது போல நடந்திருக்கும் ! ஆதலால்
காதலுக்கு இல்லையே ஆண்டு!
நீயின்றி நானில்லை நான்இன்றி நீயில்லை
நாமின்றி காதலுக்கு வேலையென்ன? - இருக்கும்
சில காலங்களில் சிரித்துவிட்டு அழுதுவிட்டு
வாழ்ந்துதான் பாப்போமோ காதலராக!!