முடிவு உன் கையில்
சோமாலியா போன்று
ஆக்கிவிடாதே தமிழ்நாட்டை !
மரங்களை வெட்டாதே
வெட்ட விடாதே !
மண்ணை தோண்டாதே
தோண்ட விடாதே !
உன் சந்ததிகள் நீருக்காக
அல்லல் படும் நிலையை
உருவாக்கி விடாதே !
விவசாய வீழ்ச்சியை
தடுத்து நிறுத்து !
2050 இல்
தமிழ்நாடு தண்ணீருக்கு
ஏங்கும் நிலையை
உருவாக்கி விடாதே !
நாடிருக்கும் ,வீடிருக்கும்
நீரின்றி நீயிருக்க மாட்டாய் !
சொர்க்க பூமியை
சோமாலியா போன்று
ஆக்கிவிடாதே !
முடிவு உன் கையில் ..!