என்னை கவர்ந்த கவிதை

புலம்பெயர்ந்த பறவையொன்று
புலம்புகிறது கவிதையென்று
புல்லரித்தேன் அவள் கவிஞரென்று
புகழுரைக்கிறாள் தன்னை மிஞ்ச யாரெயென்று

தன்னைத் தான் புகழ்ந்தால் தகுமா..
தன்னடக்கம் இல்லாவிட்டால்
தமிழ் தான் வசப்படுமா..
தலைக்கனம் உனக்கு எதற்கம்மா..

உயர உயர பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகாது பழமொழி
உவமைக்கு சொல்வது
உண்மையாகும் அது தான் தமிழ்மொழி

சுற்றி உள்ள உறவுகள் உனக்கு தாளமிடும்
சுத்தமில்லா மனதிற்கு அது கேவலம்
சுதாகரித்து நீ நட இது தான் உலகம்
சுந்தரி நீ உணரவிட்டால் உன் மானம் தண்டாவாளம்

கருத்தில்லாமல் எழுதுபவனா கவித்தென்றல்
கவிதை இல்லையென நினைத்தால் நீ மென்டல்
கற்பனையில் நான் அற்றைத் திங்கள்
காதல் கவி தான் என் எழுத்துகள் !!!

எழுதியவர் : கவித்தென்றல் ஏரூர் (1-Mar-17, 12:19 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 381

மேலே