கற்றோர் சிறப்பு - வஞ்சிப்பா
நலம்பலதரும் படிப்பினைமனம்
உலகினில்நிதம் பயிலுதல்நலம்
உறவுகளுனை மதித்திடும்படி
சிறப்புகளுனை நெருங்கியும்வர
இதனாற்றான்
கல்வியும் தருகிற கருத்துகள் நமக்குப்
பல்கியும் பெருகிடப் பரம்பொருள்
நல்கிடத் தமிழ்மொழி நவில்க நாளுமே !